தினமும் ஒரு சிறிய கிளாஸ் ஆலுவேரா ஜூஸ் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்
ஆலுவேரா ஜூஸ் குடிப்பதால் இன்சுலின் சுரப்பு சீராகும். இதன் மூலம் உயர் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாத்து, சரும சுருக்கங்களை போக்கி இளமையை காக்கிறது.
ஆலுவேரா ஜூஸில் உள்ள நொதிகள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆலுவேரா ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள கற்றாழை சாற்றை தொடர்ந்து குடிப்பதால், சளி, இருமல் மற்றும் பிற நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும்.
கற்றாழை சாறு தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் ப்ராமரிக்க உதவுகிறது.