அரிசி மற்றும் கோதுமையில் கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. இதற்கு பதிலாக, கிளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. ராகியில் புரதம் அதிக அளவில் இருப்பதோடு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ராகி மாவில் பசையம் இல்லை. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
அமராந்த் என்னும் தண்டுக்கீரை பசையம் இல்லாத மற்றும் புரதம் நிறைந்த மாவு. நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தால் கொழுப்பை எரிக்கிறது.
தினை ஒரு பசையம் இல்லாத தானியம். இதில் உள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைந்த உணர்வைத் தரும்.
குயினோவா பசையம் இல்லாத தானியம் என்பதோடு, புரதம் மற்றும் ஏராளமான நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நமது எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஓட்ஸில் உள்ள கார்போஹைட்ரேட் காரணமாக உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் உடல் எடையும் குறையும்.
எடை இழக்க தானியங்களை எடுத்துக் கொள்வது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு, சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும்.
எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.