உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் வேகமாக வெளியேறுவதில் உதவி கிடைக்கிறது. இவை மூட்டு வலியையும் குறைக்கும்.
பிரியாணி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உட்பட பல நற்பண்புகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
முருங்கை இலைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த இதை உட்கொண்டால் யூரிக் அமிலம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
வெற்றிலையின் குணங்கள் யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியேற்றுவதில் உதவுகின்றன. இதை அப்படியே மென்று உட்கொள்ளலாம்.
நம் சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் இன்னும் பலவித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.