மன ஆரோக்கியத்தை கொடுக்கும் STOP Therapy..!
நீங்கள் மன ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் STOP Therapy தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதைய காலகட்டத்தில் மன ஆரோக்கியம் என்பது மிக மோசமடைந்து வருகிறது. இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
சிலர் தாங்கள் மன அழுத்ததில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்
குழப்பம், தெளிவான பேச்சு இல்லாமை, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருப்பது, கோபம், பொறுமையின்மை மன அழுத்தத்தின் மிக முக்கிய அறிகுறிகள்
இதுதவிர ஏதாவது ஒரு விஷயம் உங்களை மிகவும் காயப்படுத்திக் கொண்டே இருப்பதும் அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதும் பிரச்சனை தான்
இப்படியான பிரச்சனை இருப்பவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தெரபி தான் STOP Therapy. இந்த தெரபி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான சூப்பரான வழிமுறை.
உங்களை ஏதாவது ஒரு விஷயம் பாதிக்கிறது என்றால் நீங்கள் STOP என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டும்
மீண்டும் அந்த விஷயத்தை இனி சிந்திக்க மாட்டேன் என சொல்லிக் கொள்ள வேண்டும். திடீரென சிந்தனைக்கு அந்த விஷயம் வந்தால் உடனே STOP என சொல்ல வேண்டும்
இப்படி சொல்லும்போது உங்கள் மனது அந்த விஷயத்தை பற்றி மேலும் நினைக்காமல் இருக்கும். அத்துடன் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தும். இந்த தெரபி உங்களின் மன ஆரோக்கியத்தை சீக்கிரம் மேம்படுத்தும்