உங்களுக்கு அதிக முடி உதிர்வு இருந்தால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விளக்கெண்ணெயில் ரோஸ்மேரி ஆயிலை கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
முடி உதிர்ந்த இடத்தில் இந்த எண்ணெய்யை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை எண்ணெய் தலையில் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்.
இந்த செயல்முறையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். முடி உதிர்ந்த இடத்தில் எண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்யவும்.
இந்த எண்ணெய்யை தலையில் பயன்படுத்தும் முன்பு சிறிது சூடு செய்து கொள்வது நல்லது.
எண்ணெய் வைத்த பின்பு ஷாம்பு கொண்டு வாஷ் செய்யவும். 2 மாதங்களில் நல்ல ரிசல்ட் தெரியும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது