மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். இவற்றை சாதாரணமாக எண்ணுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
காரணம் இல்லமால் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால், அது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாக இருக்கலாம்.
பேச்சு கோர்வையாக இல்லாமல், குழப்பமாக பேசினால், அது மூளை பாதிப்பின் எச்சரிக்கை மணியாக இருக்கலாம்.
மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பினால், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
காரணம் இல்லாமல் அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
காரணம் இல்லமால் அடிக்கடி வாந்தி ஏற்படுவது, மூளை பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
பார்வைத் திறனில் ஏற்படும் பாதிப்பு மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்
உடலில் ஏதோ ஒரு பகுதியில் அடிக்கடி உணர்வின்மை அல்லது மறத்து போகும் நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை தேவை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.