கொத்தமல்லி தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இது பசியை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உப்பசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பல வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரனம் அளிக்கின்றது.
கொத்தால்லி நீரை பருகுவதால் இரத்த சர்க்கரை அளவு குறைக்கப்பட்டு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
கொத்தமல்லி நீர் ஒரு நல்ல டிடாக்ஸ் பானமாகவும் செயல்படுகிறது. உடலில் சேரும் நச்சுகள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கொத்தமல்லி நீர் இவற்றை அகற்ற உதவுகின்றது.
கொத்தமல்லி நீரில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை விலக்கி வைக்கின்றன.
கொத்தமல்லி நீரினால் உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளின் நன்மை கிடைக்கின்றன. இதனால் உடலில் வீக்கம் குறைவதோடு, அழற்சி நோய்களும் விலகி நிற்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.