கொத்தமல்லி காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

S.Karthikeyan
Oct 26,2024
';


கொத்தமல்லி ஆயுர்வேத மருத்துவ பலன்களை கொண்ட மூலிகை. இதனை அரைத்து பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து தேநீராக குடிக்கலாம்.

';


கொத்தமல்லி தேநீர் குடித்தால் தலைவலி இருந்தால் சீக்கிரம் குறைந்துவிடும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்கள் இந்த டீ குடிக்கலாம்

';


மற்ற டீ குடிப்பதை காட்டிலும் இதனால் எந்த பக்கவிளைவுகளும் உங்களுக்கு இருக்காது, தலை பாரம் குறைந்து ரிலாக்ஸாக இருப்பீர்கள்

';


தலைவலியில் இருந்து விடுபட மாத்திரை சாப்பிடுபவர்கள், ஒருமுறை இந்த கொத்தமல்லி தேநீரை குடித்து பார்க்கலாம். நிவாரணம் கிடைக்கும்

';


மன அழுத்தம், உடல் சோர்வு இருப்பவர்களும் இந்த கொத்த மல்லி டீயை குடிக்கலாம். கடைகளில் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து குடிக்க வேண்டியிருக்கும்

';


வீட்டில் என்றால் நீங்களே ஒரு நிமிடத்தில் கொத்தமல்லி டீயை தயார் செய்துவிடலாம். இதற்கு தேவையான பொருட்கள் என்றால் கொத்தமல்லி, தண்ணீர் மட்டுமே

';


கொத்தமல்லியை அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை கொதிக்க வைத்து அதில் கொத்தமல்லி பவுடரை போட வேண்டும்

';


இனிப்பு வேண்டும் என்பவர்கள் தேவையான அளவு சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள். வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். சுவை பிரம்மாதமாக இருக்கும்

';


இது மூலிகை என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். இதனால் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story