பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
பாகற்காய் அதிக அளவில் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரு புறமே செல்லும். இதனால் இரத்த கட்டிகள் உருவாகி மாரடைப்பு அல்லது பக்க வாதத்தை ஏற்படுத்துகிறது.
பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், பாகற்காய் சாப்பிடக்கூடாது.
கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும். எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பாகற்காய் சாறு அதிகம் உட்கொள்வதால், மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகற்காயில் Tetracyclic Triterpenoid கலவை உள்ளது. இதில் உள்ள நச்சுத்தன்மையினால் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.
அதிக அளவு பாகற்காய் ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுத்தும். அதிகம் சாப்பிடுவதால் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும். சிலருக்கு மயக்கம் கூட வரும்.