கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமினகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன
அவகேடோவில் மோனோசேசுரேடட் கொழுப்புகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அளவை குறைக்கின்றன.
கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ள பீன்ஸ் வகைகள் மற்றும் பழங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள சால்மன் போன்ற மீன் வகைகள் இரத்தத்தில் எஹ்டிஎல் கொலஸ்ட்ரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்க உதவும்.
ஆலிவ் எண்ணெயில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.