யூரிக் அமிலம், மூட்டு வலி.... இரண்டுக்கும் நிவாரணம் அளிக்கும் எளிய உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அதன் காரணமாக, மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

மூட்டு வலி

யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

நெல்லிக்காய்

வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகம் உள்ள நெல்லிக்காயை யூரிக் அமில நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ளலாம். இது யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

வெந்தயம்

வெந்தயத்தில் ஆண்டிஆக்சிடெண்டுகளும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. மூட்டு வலிக்கும் இது நிவாரணம் அளிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைக்கவும் உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

கொத்தமல்லி

அனைத்து உணவு வகைகளிலும் சேர்க்கப்படும் கொத்தமல்லி மற்றும் தனியா விதைகள் இரண்டும் உடலில் உள்ள கழிவுகளை விரைவாக நீக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது யூரிக் அமில அளவை குறைப்பதுடன் உடலில் உள்ள வீக்கத்தையும் சரி செய்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 17, 2024

VIEW ALL

Read Next Story