யூரிக் அமிலத்திற்கு சுலபமா தீர்வு காண இந்த சுவையான பழங்கள் உதவும்

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

வாழைப்பழம்

வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், புரதச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். யூரிக் அமில நோயாளிகளுக்கு இது சிறந்த பழமாக பார்க்கப்படுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

திராட்சை

வைட்டமின் சி அதிகம் உள்ள திராட்சை இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது. தினமும் திராட்சை சாறு அல்லது திராட்சை பழத்தை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

நாவல் பழம்

நாவல் பழங்களை உட்கொள்வதால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுகின்றன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு அபாயகரமான ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் பிற கூறுகளையும் வெளியே அனுப்புவதில் உதவுகின்றன. இதன் மூலம் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின் சி கொண்ட பழங்களை உட்கொள்வது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்து, மூட்டு வலி, கீல்வாதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

கிரான்பெர்ரி

ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ள குருதிநெல்லி என்ற கிரான்பெர்ரி உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் அதாவது டீடாக்ஸ் செய்வதற்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் ஏற்ற பழமாக உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

கிவி

கிவி பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துகளாகும். இந்தப் பழம் யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றுவதுடன் மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

அன்னாசிப்பழம்

வைட்டமின் சி அதிகம் உள்ள அன்னாசிப்பழம் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். கீல்வாத பிரச்சனையையும் இது தடுக்க உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 18, 2024

VIEW ALL

Read Next Story