இட்லியை இப்படி செய்துப் பாருங்க! இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இட்லி!

';

இட்லி

சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெயர் பெற்ற இட்லியுடன் போட்டிபோட எந்த உணவும் முன்வராது. இட்லிக்கு போட்டி வேறுவகை இட்லி தான். அந்த வகையில் வழக்கமான இட்லியுடன் போட்டி போடும் பூசணிக்காய் இட்லி எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்

';

பூசணிக்காய் இட்லி

காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் என நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடட்லாம். அதில் பூசணிக்காய் இட்லிக்கு முதல் இடம் உண்டு.

';

ரவா இட்லி

அரிசி உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பாரம்பரியமானது என்றால், ரவா இட்லி அதற்கு அடுத்த இடத்தை பிடிக்கும்.

';

இட்லி

வெள்ளை நிறத்தில் தான் இட்லியை பார்த்திருப்பீர்கள், ஆனால் விதம்விதமான நிறங்களில் இட்லியை தயாரிக்கலாம்

';

பூசணிக்காய் இட்லி

ரவையில் தான் பூசணிக்காய் இட்லி செய்வோம். ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். கொஞ்சம் கடலைப் பருப்பை ஊறவைத்து அதையும் கலந்துக் கொள்ளவும்.

';

தேங்காய்

பூசணிக்காய் இட்லியில் தேங்காய் மற்றும் சீரகமும் சேர்க்க வேண்டும். பரங்கிக்காயை பொடியாக சீவி எடுத்துக் கொள்ளவும், இந்த மூன்றையும் ரவை கலவையுடன் சேர்க்கவும்

';

மிளகு

ரவா இட்லியைப் போலவே இந்த இட்லியிலும் மிளகு சேர்க்க வேண்டும். மிளகு உப்பு சேர்த்து, இறுதியாக அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை நறுக்கி சேர்த்து இட்லி பானையின் குழிகளில் ஊற்றி வேகவைக்கவும். பூசணிக்காய் நீர்த்து போய்விடும் என்பதால், நீண்ட நேரம் மாவை வைத்திருக்க வேண்டாம்

';

வேக வைத்தல்

ஆவியில் வேக வைத்த பிறகு இட்லியை வெளியே எடுத்தால், பஞ்சு போன்ற மஞ்சள் நிற இட்லி தயார்!

';

சத்தான சிற்றுண்டி

சட்னி, அதிலும் தேங்காய் சட்னியுடன் கூட்டு சேர்ந்தால், பூசணிக்காய் இட்லியை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த இட்லி உங்களுக்கு பிடித்துப்போய்விடும்...

';

VIEW ALL

Read Next Story