இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து, சாப்பிட்ட பிறகு திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
முட்டைகோஸ் சர்க்கரை அளவை குறைப்பதில் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கீரையில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரி அளவு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளன. இது இரத்தத்தில் க்ளூக்கோஸ் அளவை சீராக்க உதவுகின்றது.
அஸ்பாரகஸ் இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தி சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது.
கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள குடைமிளகாய் சுகர் நோயாளிகளுக்கு பெரிய அளவில் உதவும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
ப்ரோக்கோலியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.