தினமும் மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரிந்தால் நீங்கள் தினமும் மூலிகை தேநீரைக் குடிப்பீர்கள்.
மூலிகை டீ மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். தூக்கமின்மையைச் சரிசெய்ய உதவும். மன அழுத்தத்தில் உள்ளவர்கள் மூலிகை டீ குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும்.
காலை, மாலை இருவேளைத் தேநீர் அருந்துவது அனைவருக்கும் பிடிக்கும். பால் தேநீருக்கு மாற்றுத் தேநீராக மூலிகை தேநீரைக் குடித்துப் பழகவும்.
மூலிகை தேநீரால் உங்கள் உடலில் ஏற்படும் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பலவிதப் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.
மூலிகை டீ தினமும் குடித்து வந்தால் சருமத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி, சருமம் பளப்பளப்பாகும். சரும புத்துணர்வுப் பெற உதவும்.
பலருக்கு அடிக்கடி நோய் எதிர்ப்புச்சக்தியால் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் விரைவில் தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த மூலிகை குடிப்பது சிறந்த பலன் கிடைக்கும்.
மூலிகை டீ நம்முடைய உடல் எடையைக் கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. உடலின் எடையை நடுநிலையாக வைத்திருக்க உதவும்.
மூலிகை டீ தினசரி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவு உறங்கும் முன் குடித்தாலும் சிறந்த பலன் கிடைக்கும்.
மூலிகை டீ வயிற்றுத்தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும். மூலிகை தேநீரில் ஆக்ஸிடன்ட் பண்புகள் செரிமான தொடர்புடைய பல பிரச்சனைகளை இது சரிசெய்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)