நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கியம். அதன் குறைபாடுகள் உடலில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்: பலவீனம், வெளிரிய தோல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல்.
உடலில் கால்சியத்தை உறிஞ்சி, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், தசைகளில் பலவீனம், எலும்பு வலி மற்றும் அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படலாம்.
நரம்புகள் மற்றும் இரத்தத்தை ஆரோக்கியமாக வைக்க்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளில் சோர்வு, பலவீனம், வெளிர் தோல், கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு ஆகியவை அடங்கும்.
கால்சியம் குறைபாடு இருந்தால் தோன்றும் சில அறிகுறிகள், தசைப்பிடிப்பு, உடலில் கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் உடையக்கூடிய நகங்கள் ஆகியவை.
அடிக்கடி வரும் நோய்த்தொற்றுகள், வறண்ட சருமம் மற்றும் மாலைக் கண் நோய் ஆகியவை வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கிய அறிகுறிகளாகும்.
வைட்டமின் சி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் தசை வலி மற்றும் பலவீனம், மூட்டு வலி மற்றும் சோர்வு.
அயோடின் குறைபாடு எடை அதிகரிப்பு, சோர்வு, காயிட்டர் அல்லது கழுத்து வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.