தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்கள் சி மற்றும் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் பாலை தலையில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
தலைமுடி முழுவதும் தேங்காய் பால் இருக்கும் படி நன்கு தேய்த்து கொள்ளுங்கள்.
தேங்காய் பாலை உச்சந்தலையில் தேய்த்த பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தேங்காய் பாலில் கலந்தால் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.
நன்கு ஊறிய பிறகு ஷாம்பூவை பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையையு சுத்தம் செய்யவும்.
வாரம் ஒருமுறை இவ்வாறு செய்வது முடி உதிர்தல் மற்றும் பிளவு முனைகளை தடுக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை