உடல் இளைப்பதற்கு அதிக கலோரிகளை எரிப்பது முக்கியம்.
அதிக கலோரிகளை எரிக்க உணவில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும்.
அதிக கலோரிகளை எரிக்க, உங்கள் நாளை டீ டாக்ஸ் பானத்துடன் தொடக்கவும்.
காலை உணவை தவிர்க்காமல், புரதம், நார்ச்சத்து நிறைந்த, ஓட்ஸ் முட்டை போன்ற உணவுகளை உணவுகளை தேர்ந்தெடுக்கவும்.
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் நச்சுக்களை வெளியேற்றி மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் சாப்பிடும் உணவு உடன் உமிழ்நீர் நன்றாக கலந்து செரிமானம் சிறப்பாக இருக்கும்.
அளவோடு நெய் சேர்க்க வேண்டும். இதனால் மூட்டு வலி தீர்வதோடு செரிமானமும் சிறப்பாக இருக்கும்
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் உங்களுக்கு ஏற்ற உடல்பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்.
உணவில் அரிசி அளவை குறைத்து, சத்தான காய்கறிகள் அதிகம் உணவில் இருக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.