ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மாரடைப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதர்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
நல்ல வாழ்க்கை முறை, சீரான உணவுமுறை மூலம் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
தினமும் 30 நிமிட உடற்பயிற்சி அல்லது வாக்கிங், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் மாயங்கள் செய்யும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உடல் பருமனை குறைப்பது மிக அவசியம். சிறிய அளவிலான உடல் எடை குறைப்பு கூட நல்ல பலன்களை கொடுக்கும்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் உணவில் சோடியத்தின் அளவைக் குறைக்க வேண்டும். தினமும் 1,500 மி.கி சோடியத்தை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.