காலையில் எழுந்ததும் டீ அல்ல காபிக்கு பதில் எலுமிச்சை நீர் அல்லது கிரீன் டீயை குடித்து பழகுங்கள்.
கிரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது, இது அதிகப்படியான பிளேக்கைக் குறைக்கிறது.
அவ்வப்போது ஒரு பூண்டை மென்று சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
தினசரி காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்து கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.
தினசரி நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இவற்றில் அதிக சத்துக்கள் நிரைந்துள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தை குறைக்க தினசரி நல்ல தூக்கம் அவசியம்.