தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு அரசாங்க திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு நிதி பாதுகாப்பு பெறலாம். NPS மூலம் மொத்தத் தொகையை சேர்ப்பது மட்டுமல்லாமல் மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது. NPS மூலம் கிடைக்கும் ரிட்டர்ன் சந்தை ஏற்று இறக்கங்களை சார்ந்தது.
இதில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் டயர் 1 கணக்கைத் திறக்கலாம். ஆனால் டயர் 2 கணக்கை திறக்க டயர் 1 கணக்கு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மொத்தத் தொகையில் 60 சதவீத தொகையை 60 வயது வயதில் எடுக்கலாம்.
குறைந்தபட்சம் 40 சதவீத தொகை ஆனுவிட்டிக்கு செல்கிறது. இதன் மூலம் ஓய்வூதியம் கிடைக்கின்றது. மாதா மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு ரூ.15,000 முதலீடு செய்தால், மொத்த முதலீடு 45 லட்சம் ரூபாயாக இருக்கும்.
25 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மாதம் முதலீடு செய்வதால், ரூ.2 கோடியை விட அதிக தொகை கிடைக்கும்.
40 சதவீத தொகை ஆனுவிட்டியாகவும் மீதமுள்ள தொகை மொத்தமாகவும் கிடைக்கும். ஆனுவிட்டி தொகையில் 8% ரிடர்ண் மூலம் சுமார் ரூ.53,516 மாத ஓய்வூதியாஅக கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.