களங்கமில்லா முகம் வேண்டுமா? அழகான சருமத்திற்கு வேப்பிலை மந்திரம்

';

வேப்பிலை

ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள், கிளைகோசைடுகள் எனப்படும் சிறப்பு இரசாயனங்கள் வேப்பிலையில் உள்ளது. இது பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுபப்துடன், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

';

சஞ்சீவனி

வேப்பமரத்தின் இலைகள், பட்டை, வேப்பம்பழம், வேப்பங்குச்சி என அதன் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்கு மருத்துவ குணங்களை வழங்குகிறது. அதுமட்டுமல்ல, வேப்ப மரத்தை தொட்டு வரும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகமாக உள்ளது.

';

தோல் அரிப்பு

சருமத்திற்கு வேப்பிலை பல நன்மைகளைச் செய்கிறது. தோலில் ஏற்படும் அரிப்புகளை போக்க வேப்பிலை நீரைப் பயன்படுத்தலாம். தண்ணீரில் வேப்பிலை கொழுந்தைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அது ஆறியபிறாகு, குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். இது உடல் அரிப்பு பிரச்சனையை போக்கும்.

';

வேப்பிலை தூள்

சருமத்திற்கு வேப்பிலையை பச்சையாக அரைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வேப்பிலையை நன்றாக காயவைத்து, அரைத்து வைத்துக் கொண்டும் அதை பயன்படுத்தலாம்

';

மஞ்சளுடன் வேப்பிலை

வேப்ப இலைகளை, மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, அந்த பேஸ்டை சருமத்தில் பூசினால், அரிக்கும் தோலழற்சி, புழுக்கள் மற்றும் சரும பாதிப்புகள் சரியாகும்.

';

முகப்பரு

வடுக்கள் மற்றும் தோல் நிற மாற்றத்தை வேப்பிலை குறைக்கிறது.முகப்பருவை குணப்படுத்தும் பண்பு கொண்ட வேப்பிலையின் சாற்றை முகப்பருவின் மேல் தடவி வந்தால் பருக்கள் மறையும்.

';

வேப்பிலையும் தேனும்

தோல் அரிப்பைக் குறைக்க, வேப்பிலை பேஸ்டுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு கழுவுங்கள், அரிப்பு பிரச்சனை குறையும்

';

பொடுகு பிரச்சனை

வேப்பெண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால் குளிர்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. யூரிக் அமில பாதிப்பு இருப்பவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை குணமாக்க வேப்பெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்

';

வேப்பிலை கசாயம்

உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும், உடலை டீடாக்ஸ் செய்யவும் வேப்பிலை கசாயம் உதவும். வெந்நீரில் வேப்பிலையை கொதிக்க விட்டு, அதில் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து, அதனுடன் வெல்லத்தை சேர்த்து குடித்து வந்தால் உடல் சுத்தமாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story