இரவு நேர நடைபயிற்சி மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.
இரவு நேர நடைபயிற்சி மூலம் செரிமானம் மேம்படுவதால், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
இரவு நேர நடைபயிற்சி மூலம் ஜீரணத்திற்கு தேவையான என்ஜைம்கள் உடலில் உற்பத்தி ஆகி, சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் அடையும்.
இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் குறையும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், இரவு உணவு சாப்பிட்ட பின் நடப்பதால், ரத்த சர்க்கரை அளவு மிகவும் சீராக இருக்கும்.
தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக பசியை கட்டுப்படுத்த முடியும். இதனால் உடல் பருமன் குறையும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.