கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது போது நீரிழிவு ஏற்படும். இந்நிலையில், இன்சுலினை இயற்கையாக தூண்டும் மசாலாக்களை அறிந்து கொள்ளலாம்.
தனியா அல்லது கொத்தமல்லி விதைகள், கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம், 4-ஹைட்ராக்ஸிசோ-லூசின் கணைய செல்களில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. வெந்தயத்தில் 50-சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து உயிரணுக்களுக்குச் சர்க்கரையின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரையைக் குறைக்க இலவங்கபட்டை உதவும்
உணவுவிற்கு பின் கிராம்பை சாப்பிடுவது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
மஞ்சள் இன்சுலின் சுரப்பத்தை அதிகரிப்பதோடு, அதில் உள்ள குர்குமின் புற்று நோய் உட்பட பல கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.