காலையில் ‘பெட் டீ’ குடிப்பவரா? வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது சரியா தவறா? ஆபத்தான ஆச்சரியம்!

Malathi Tamilselvan
Mar 26,2024
';

தேநீர்

பலர் ஒரு நாளைக்கு பல முறை தேநீர் அருந்துகிறார்கள். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும் வழக்கம் சரியானதல்ல என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். தேநீர் அருந்துவதற்கு நேரமும் விதிகளும் உள்ளன என்றாலும் அவை பலருக்குத் தெரிவதில்லை

';

க்ரீன் டீ

பால் அருந்திய தேநீர் முதல் மசாலா டீ வரை பல்வேறு ரூபத்தில் தேநீரை தயாரித்து அருந்தினாலும், அடிக்கடி டீ குடிப்பது உடலுக்கும் நல்லதல்ல, அதேபோல காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்

';

பாலில்லா தேநீர்

தேநீரில் பால் கலந்து அருந்துவதுதான் தவறு, பாலில்லா தேநீர், அதாவது கருப்பு டீ எனப்படும் ப்ளாக் டீ அருந்துவது நல்லது என பலரும் நம்புகின்றனர். உண்மையில் காலையில் டீ குடிக்காமல் இருப்பதே நல்லது

';

டிப் டீ

வெறும் வெந்நீரில் டீப்பையை போட்டு சில நிமிடங்களில் அந்த தேநீரை அப்படியே குடிக்கும் வழக்கமும் உண்டு. இதில் தேநீரின் மோசமான விளைவுகள் முற்றிலுமாக பாதிக்காவிட்டாலும் வெறும் வயிற்றில் குடித்தால், அசிடிடி ஏற்படுத்தும்

';

மூலிகைத் தேநீர்

தேநீரில் மிக பிரபலமான வகையான மூலிகைத் தேநீர்கள் உடல்நலனுக்கு நன்மையைத் தரும் என்றாலும், அவற்றையும் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல...

';

தேநீர் வகைகள்

எந்த வகையான தேநீராக இருந்தாலும் காலைய்ல் வெறும் வயிற்றில் குடிப்பதால், பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, டீ குடிப்பதால் சிறுநீர் பிரச்சனை ஏற்படலாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story