தைராய்டையும் அசால்டா ஹேண்டில் பண்ண இந்த ஜூஸ்களை டிரை பண்ணலாமே?

';

தைராய்டு

கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சுரப்பியின் வேலையை, தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாற்றிவிடுகின்றன

';

வாழ்க்கை முறை

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துடன், உடல் உழைப்பும் குறைந்து போனதால் இன்று பலருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. தைராய்டு இருந்தால் உடல் எடையில் மாறுதல்கள் ஏற்படும். பொதுவாக எடை அதிகரிக்கத் தொடங்குகிறது அல்லது குறையத் தொடங்குகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க சில ஜூஸ்கள் உதவும்

';

நீர் தாமரை

தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்த நீர் தாமரை சாறு உதவுகிறது.இரு கப் தண்ணீரில், சுத்தம் செய்த தாமரை இலைகள் மற்றும் 2 ஆப்பிள்களை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடல் பருமன் குறைவதுடன், தைராய்டு சுரப்பியின் வேலையும் சீராகும்

';

வெள்ளரி சாறு

2 பெரிய வெள்ளரிகளை நறுக்கி, ஒரு அதிவேக பிளெண்டரில் அரைத்து எடுத்துக் கொண்டு, அதனை வடிகட்டி பருகலாம். இந்த ஜூஸ், தைராய்டு பிரச்சனைக்கு மட்டுமல்ல, சிறுநீரகங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்திற்கும் புத்துணர்ச்சியூட்டும்

';

சுரைக்காய்

உடலுக்கு பலம் தரும் சுரைக்காய் சாறு, எனர்ஜி பூஸ்டராக செயல்படுகிறது. முக்கியமாக தைராய்டு பிரச்சனைக்கு நல்ல நிவாரணமாக செயல்படும் சுரைக்காய் சாறு, உடல் எடையையும் குறைக்கிறது.

';

பீட்ரூட் & கேரட் சாறு

இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற வைட்டமின்களின் குறைபாட்டை சீர் செய்ய கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் உதவும். தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த ஜூஸ் தயாரிக்க 1 கேரட், 1 பீட்ரூட், மாதுளை, ஆப்பிள் இவை அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி ஜூஸ் செய்து பருகவும்

';

எலுமிச்சை ஜூஸ்

தினசரி இரு முறை எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தைராய்டு சுரப்பியை சரியாக வேலை செய்ய வைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்கவும் உதவும்.

';

செலரி சாறு

நாள்பட்ட நோய்களுக்கு எதிரான ஒரு "ரகசிய ஆயுதம்", செலரியின் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு நன்றி. 16 அவுன்ஸ் குடிக்கவும். ஒவ்வொரு காலையிலும் இந்த செய்முறை: 1 கொத்து செலரியை துவைத்து, ஒரு ஜூஸர் மூலம் இயக்கவும், அல்லது செலரியை ஒரு பிளெண்டரில் மென்மையான வரை நறுக்கி கலக்கவும், பின்னர் வடிகட்டி மற்றும் அனுபவிக்கவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story