சீரகம் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நச்சுகளை வெளியேற்றி சிறுநீரக கல் அபாயத்தைக் குறைக்கிறது.
சீரகம் சிறுநீரகத்தில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.
சீரகம் யூரிக் அமில அளவைக் குறைத்து சிறுநீரகக் கல் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
சீரகத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, சிறுநீரக நோய் அபாயத்தைத் தடுக்கலாம்.
சீரகத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் சேதத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தச் சீரகம் சிறந்த பொருளாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.