வேகமான வெயிட் லாசுக்கு வேற எதுவும் செய்ய வேண்டாம்: இதை செய்தால் போதும்

';

எடை இழப்பு

உடல் எடையை குறைப்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில எளிய பழக்கங்களை பற்றி இங்கே காணலாம்.

';

நார்ச்சத்து

கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது பசியை கட்டுப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

';

சமச்சீர் உணவு

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில், எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

';

கொட்டைகள் மற்றும் விதைகள்

ஊறவைத்த கொட்டைகள் மற்றும் விதைகளை நமது டயட்டில் சேர்ப்பது ஆரோக்கியமான கொழுப்பை உடலுக்கு அளிப்பதோடு, கெட்ட கொழுப்பு, குறிப்பாக, தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகின்றது.

';

செரிமானம்

எடை இழப்புக்கு செரிமானம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆகையால், குடல் ஆரொக்கியத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,

';

உடற்பயிற்சி

தினமும் நம் உடலில் சேரும் கலோரிகளை எரிக்க, குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

';

தண்ணீர்

உடல் பருமனை குறைக்க உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிக அவசியம். போதுமான தண்ணீர் உட்கொள்வதால் நம் உடலில் உள்ள கழிவுகள் வேகமாக நீக்கப்படுகின்றன.

';

உறக்கம்

தூக்கம் குறைந்தால் உடல் எடை கூடும். தினமும் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் உறங்குவதும், உறங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்னர் இரவு உணவை உட்கொள்வதும் மிக அவசியமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story