சுகர் நோயாளிகளுக்கான சம்மர் ஸ்பெஷல் டிப்ஸ்: கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க பாஸ்

Sripriya Sambathkumar
May 11,2024
';

இலகுவான உணவு

கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் ஜீரணிக்க கடினமான, கலோரிகள் நிறைந்த கனமான உணவுப் பொருட்களை தவிர்த்து, ஜீரணிக்க எளிதான, சத்தான, சமச்சீரான, இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

';

நீரேற்றத்துடன் இருங்கள்

நீரிழப்பு இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருப்பது முக்கியம்.

';

ஃப்ரெஷ் உணவுகள்

ஃப்ரெஷ்ஷான, பருவகால உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாத பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

';

உணவின் நேரம்

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிடுவதால், பசி அதிகமாகி உணவின் அளவு அதிகமாகும். இது செரிமானத்தை கடினமாக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சரியான நேரத்தில் சாப்பிடுவது மிக அவசியம்.

';

குறைந்த ஜிஐ

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளைத் தேர்வு செய்து, இரத்தத்தில் சர்க்கரை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் வெள்ளை ரொட்டி, சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

';

இரத்த பரிசோதனை

கோடையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். ஆகையால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிப்பது அவசியம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story