உடல் எடையை குறைக்க உதவும் கீரைகளின் பட்டியலில் இடம் பெறும் ஊட்டச்சத்து புதையல்

';

கீரை வகைகள்

சைவ உணவுகளில், கீரை ஊட்டச்சத்துக்களின் புதையல் என்றே சொல்லலாம். ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் போன்றவற்றை கொண்டிருக்கின்றன.உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான டயட்டில் தவறாது இடம்பெறும் கீரைகள் இவை

';

பீட்ரூட் கீரை

சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்த பீட்ருட் கீரை, சிறுநீர் மூலம் கெட்டக் கொழுப்பை வெளியேற்றுகிறது

';

அகத்தி கீரை

வைட்டமின் சி அதிக அளவில் உள்ள அகத்தி கீரை கொழுப்புகளை கரைக்கிறது. அதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள், உடல் எடையை குறைப்பதுடன் வேறு பல நோய்களையும் அண்டவிடாமல் செய்கிறது

';

முருங்கைக் கீரை

பொரியல், சூப் என விதம்விதமாக முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கெட்ட கொழுப்பு குறைவதுடன் ஊட்டச்சத்து குறைபாடும் நீங்கும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடுக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் முருங்கைக்கீரையில் உள்ளன.

';

கொத்தமல்லி

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட கொத்தமல்லிக்கீரை, உடல் எடையையும் குறைகிறது. கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தாலே, உடலிலுள்ள கழிவுகள் நீங்கி உடல் எடை குறையும்

';

பருப்புக்கீரை

ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கொண்ட பருப்புக்கீரைஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கிறது

';

பசலைக்கீரை

பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் கொண்ட பாலக் எனப்படும் பசலைக்கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இது உடலில் படிந்துள்ள கொழுப்பை அகற்ற உதவும்

';

அரைக்கீரை

நார்ச்சத்து , கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அரைக் கீரை,கொலஸ்ட்ராலை உடைத்து உடல் மீண்டும் உருவாக்கும் பித்த உப்புகளையும் உடலில் இருந்து நீக்குகிறது.

';

வெந்தயக் கீரை

பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ள வெந்தயக் கீரையை பல விதமாக சமைத்து உண்ணலாம். இது உடலில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைக்க உதவும்

';

VIEW ALL

Read Next Story