உடல் பருமன் நமது ஆளுமையை கெடுப்பது மட்டுமல்லாமல், இதனால் பல வித உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
உங்கள் சமையலறையில் இருக்கும் சீரகம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். சீரகத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அம்த நீரை குடிக்கவும். சீரகத்தில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உடல் எடையை குறைக்கவும் கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகின்றன.
ஓமம் செரிமானத்தை சீராக்குவதில் ஒப்பற்ற மசாலாவாக பார்க்கப்படுகின்றது. வேகமாக தொப்பை கொழுப்பை குறைக்க இதை தினமும் குடிக்கலாம்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பெரிய வழியில் உதவுகிறது. இது எடை இழப்பை மிகவும் எளிதாக்குகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. தினமும் வெதுவெதுப்பான நீரில் 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடிப்பது கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.
இலவங்கப்பட்டையில் அதிக அளவில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தினமும் காலை ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை நீர் குடிப்பது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.