யூரிக் அமிலம் அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இயற்கையான வழிகளில் யூரிம் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன. இதில் உள்ள மருத்துவ குணங்கள் யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
ஆயுர்வேதத்தில் மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து மருந்தாக கருதப்படுகின்றது. யூரிக் அமில அளவை குறைக்கவும், உடல் வலி மற்றும் வீக்கத்தை சரி செய்யவும் இது உதவுகின்றது.
யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் இஞ்சி சாறு குடிக்கலாம். இதில் உள்ள பண்புகள் யூரிக் அமில அளவை குறைப்பதோடு, உடல் வலியையும் சரி செய்கின்றன.
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையான திரிபலா சூரணம் யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை தண்ணீருடன் உட்கொண்டால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.
உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த வெள்ளரிக்காயை உட்கொள்ளலாம். இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து, வேகமாக நச்சுகளை அகற்றி யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.