கல்லீரல் வீக்கம் இருப்பதாக சந்தேகம் இருந்தாலே இந்த உணவுகளை அடிக்கடி சேர்த்திக்கோங்க!

';

பித்தநீர்

முதிர்ச்சியடைந்த இரத்த சிவப்பணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கும் பணியை கல்லீரல் செய்கிறது. இந்த செயல்முறையில் பித்தநீர் உருவாகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலுக்குள் சென்று உணவைச் செரிமானம் செய்கிறது.

';

கல்லீரல் வீக்கம்

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதை கல்லீரல் வீக்கம் என்று கூறுகிறோம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே சரியான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தால் பிரச்சனை இல்லை

';

பச்சை இலை காய்கறிகள்

இரவு உணவில் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் மெக்னீசியம் கொண்ட இவை கல்லீரலின் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன

';

காய்கனிகள்

தினசரி உணவில் காய்கள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வதால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதுடன் நார்ச்சத்து கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

';

வைட்டமின் சி

புளிப்பு சுவை மிகுந்த பழங்கள், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமி சி கொண்ட பழங்கள் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும்

';

தாமரை இலை

ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற நன்மை பயக்கும் பொருட்கள் கொண்ட தாமரை இலை மற்றும் தாமரைத் தண்டு கொழுப்பைக் குறைக்க உதவுவதுடன், ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. தாமரை இலைகளை உணவாக சமைத்தும் உண்ணலாம், தேநீர் தயாரித்தும் பருகலாம்

';

மஞ்சள்

மசாலாப் பொருளான மஞ்சள், பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இது, கல்லீரல் வீக்கத்தையும் சீர் செய்ய உதவுகிறது

';

பூண்டு

கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு, பூண்டில் உள்ள அல்லிசின் மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பூண்டின் பண்புகள், உடலில் ஏற்படும் தீமைகளை தடுக்கும் தன்மை கொண்டது.

';

வெங்காயம்

உடலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவைக் குறைக்க்கும், அதேபோல கல்லீரல் கொழுப்பைக் குறைக்கிறது. எனவே, வெங்காயத்தை தினசரி சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story