உடலுக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, தசைகள், எலும்புகள், தோல் மற்றும் குருத்தெலும்புகளை உருவாக்க இது அவசியம்.
திசு சரிசெய்தல், செல் பழுதுபார்ப்பு, ஹார்மோன்களின் ஒழுங்குமுறை மற்றும் உடல் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துவதற்கும் இது அவசியம்
அமினோ அமிலங்களை உடலால் சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. அதற்கு புரதம் அவசியிஅம் முழுமையான புரதமாக கருதப்படும் தாவர அடிப்படையிலான உணவுகள் இவை
அமினோ அமிலங்களால் ஆன புரதச்சத்தை கட்டுமானத் தொகுதிகள் என்று அழைக்கிறோம்
பிரவுன் ரைஸ் புரதம் ஒரு முழுமையான புரதம். இதில், உடலுக்குத் தேவையான அனைத்து 9 அமினோ அமிலங்களும் உள்ளது. சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத மூலமாகும்.
முழுமையான புரதமான பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன
9 அமினோ அமிலங்களையும் கொண்ட சியா விதைகளில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன
தானியங்களில் ஒன்றான மரகோதுமையில் புரதச்சத்து மட்டுமல்ல, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை