கன்னங்கள், கைகள், பிட்டம் ஆகியவற்றில் சதைப்பற்றே இல்லாமல் குழந்தைகள் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள்
குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அது ஊட்டச்சத்து குறைபாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
குழந்தை எடை குறைவாக இருப்பதையும், அவர்களின் வளர்ச்சி அவர்களின் வயதுக்கு ஏற்ப இல்லை என்பதும் பெற்றோர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தும்.
தரமில்லாத உணவுகள், ஆரோக்கியமான உணவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை அல்லது உடல் ஊட்டச்சத்துக்களை கிரகிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் போதுமான கலோரிகள் இல்லாமல் குழந்தையின் எடை குறைவாக இருக்கக்கூடும்
ஆரோக்கியமான குழந்தைகளுடன் ஒப்பிடும்போது மந்தமாகவும் சுறுசுறுப்பில்லாமலும் இருந்தால் கவனம் தேவை. சில சமயங்களில் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் சிரமம், நாள்பட்ட வயிற்றுப்போக்கு போன்ற அடிப்படை நோயின் அறிகுறிகளால் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கலாம்
தைராய்டு அல்லது அட்ரீனல் சுரப்பிகளைப் பாதிக்கும் ஹார்மோன் கோளாறு, நீரிழிவு நோய் அல்லது நரம்பியல் கோளாறு என வேறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கலாம்
மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், கருவிலேயே பிரச்சனை அல்லது கர்ப்ப காலத்தில் கோளாறுகள் காரணமாக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கலாம்
குறைந்த எடையுடன் பிறந்தாலும், பொதுவாக 2 வயதிற்குள் குழந்தைகள், இயல்பான எடை மற்றும் உயரத்தைப் பிடிக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சித் திறனைப் பாதிக்கும் ஏதேனும் அடிப்படை மரபணு நிலையும் இருக்கலாம்
தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.