குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பெண்கள் கர்ப்பம் அடைய எந்த காலம் சிறந்தது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். கோடை, மழை, பனி மூன்றில் எது பெஸ்ட் என்ற கேள்வி இருக்கும்
உண்மையில் மூன்று பருவங்களில், பிரசவத்திற்கு ஏற்றதாகக் கருதப்படுவது குளிர்காலம் மட்டுமே. ஆனால் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
குளிர்காலத்தில் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்
அதிக தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பிணிகளுக்கு பிரச்சனையாக இருக்கும். அதற்காக குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது பெரிய தவறு.
கர்ப்ப காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் நீரிழப்புடன் இருந்தால், அது குழந்தையை வெகுவாக பாதிக்கும்
இது தவிர, அரிப்பு, சிவப்பு புள்ளிகள், வீக்கம் மற்றும் கொப்புளங்கள் கை மற்றும் கால்களில் ஏற்படலாம்.
எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பகால தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவும். இது நோய் கிருமிகள் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
உணவு பழக்க வழக்கத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் என சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம் நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம். குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.