ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் இந்த காலகட்டத்தில் பலருக்கு யூரிக் அமில அளவு அதிகரித்து பிரச்சனைகள் உருவாகின்றன.
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அதனால், மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமில அளவை இயற்கையான வழிகளில் கட்டுப்படுத்த உதவும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெற்றிலை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதை சரியான வழியில் உட்கொண்டால் இதில் உள்ள பண்புகள் மூலம் யூரிக் அமிலமும் கட்டுக்குள் இருக்கும் மூட்டு வலியும் குறையும்.
துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் வேகமாக வெளியேறுவதில் உதவி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதோடு மூட்டு வலியையும் குறைக்கும்.
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் வேப்பிலை உதவும்.
முருங்கை இலைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த இதை உட்கொண்டால் யூரிக் அமிலம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.