நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
முட்டைகளில் புரதச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இது மேம்படுத்தும்.
சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற விதை வகைகளில் புரதச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சால்மன் போன்ற மீன் வகைகளில் உயர் ரக புரதச்சத்தும் ஒமேகா-3 கொழுப்ப அமிலங்களும் உள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.
சுகர் நோயாளிகள் அவ்வப்போது ராஜ்மா உட்கொள்ளலாம். இதில் அதிகமாக உள்ள புரதச்சத்து சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்.
பட்டாணியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதோடு நார்ச்சத்தும் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவும்.
உலர் பழங்களில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இவை ஆக்ஸிடிட்டி அழுத்தத்தை குறைத்து கிளைசெமிக் குறியீட்டை கட்டுக்குள் வைக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.