பாதாம் பருப்பு எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. இதன் ஊட்டச்சத்து நன்மைகளை முழுமையாக பெற அதனை சரியான வகையில் சாப்பிட வேண்டியது அவசியம்.
புரோட்டின் மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்குவரபர்களுக்கு போக்க விரும்புபவர்களுக்கு, பாதாம் சிறந்த தேர்வு.
எனினும் பாதாமை பச்சையாக சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்து பலனை முழுமையாக பெற முடியாது.
பாதாமை இரவில் ஊற வைத்து, பின்னர் அதன் தோலை நீக்கி, அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடுவதால் முழுமையான பலனை அடையலாம்.
பாதாமை ஊற வைத்து சாப்பிடும் போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாவதோடு, செரிமானத்திற்கும் எளிதாக இருக்கும்.
பாதாமை ஊற வைப்பதால் ஊட்டச்சத்துக்கள் உடலில் எளிதாக உறிஞ்சப்பட்டு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.