காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, பி, சி, இ, கே ஆகியவை அதிகம் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
காலிஃபிளவர் சிறந்த காய்கறி என்பதை மறுக்க இயலாது. ஆனால் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதால் காலிஃபிளவரை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது
ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் காலிஃபிளவரை அளவோடு உண்ண வேண்டும். ஏனென்றில் இது தைராய்டு ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.
காலிஃபிளவரில் பியூரின் என்ற கரிம சேர்மம் உள்ளது. எனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காலிஃபிளவரில் வைட்டமின்-கே உள்ளதால், ரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை உட்கொள்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது.
காலிஃபிளவரில் பொட்டாசியம் உள்ளதால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
நாள்பட்ட அலர்ஜி பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் காலிஃபிளவரை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் வீக்கம் அல்லது மூச்சுத் திணறல் பிரச்சனை அதிகரிக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.