கிரீன் டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது. எனினும், சிலருக்கு இது அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக ஆண்டிஆக்சிடெண்ட் உள்ள கிரீன் டீயில் வைட்டமின் சி, டி மற்றும் கேல்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன.
சில சந்தர்ப்பங்களில் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கண்களில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருப்பவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கிரீன் டீயில் உள்ள கூறுகள் படபடப்புக்கு காரணமாவதால் இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நல்லதல்ல.
அதிகமாக கிரீன் டீ குடித்தால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
கிரீன் டீயில் இருக்கும் டேனின் வயிற்றில் வாயுவை அதிகரிக்கலாம். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதிகமாக கிரீன் டீ குடிப்பதால் இதயத்துடிப்பு அதிகமாகி அதனால் படபடப்பு, துக்கமின்மை ஆகியவை ஏற்படும்.