இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இதைத் தண்ணீரில் ஒன்றாக்கி தலைமுடியில் தடவி 5 நிமிடம் மசாஸ் செய்து ஊற வைக்கவும். பிறகு தலை முடியை நன்றாக வாஷ் செய்யுங்கள்.
கற்றாழை சாற்றை உங்கள் தலை முடியில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் நன்னீரில் நன்கு கழுவுங்கள்.
முட்டையில் இருக்கும் கொழுப்பு மற்றும் புரதம் உங்கள் உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் நன்கு ஊற வைக்கவும். பிறகு உங்கள் கூந்தலை நன்னீரில் நன்றாகக் கழுவவும்.
தயிர் உங்கள் கூந்தலில் தடவுவதால் பொடுகு போன்ற பிரச்சனைகள் சரியாகும் என சொல்லப்படுகிறது.
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அவற்றை ஒரு பேஸ்டாக்கி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவிக் குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஆரஞ்சு தோலில் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து பேஸ்டாக நன்கு அரைத்து, அதன்பின் உங்கள் தலைமுடியில் தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)