வாய்ப்புண்ணால் அவதியா? கவலையே வேண்டாம், இப்படி செய்தால் புண் சட்டுன்னு ஆறிடும்!

Malathi Tamilselvan
Mar 21,2024
';

வாய் அல்சர்

சுகாதாரத்தை பராமரிக்க நாம் உணவுகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையான விஷயம். ஆனால், அந்த உணவையே உண்ண முடியாமல் பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்புண் எனப்படும் வாய் அல்சர் மிகவும் வலி தரக்கூடியது

';

புண்

நாக்கும், கன்னங்களின் உட்புறம், பல் ஈறுகள், உட்புற உதடுகளில் ஏற்படும் கொப்புளங்கள் தாங்க முடியாத வலியைக் கொடுக்கும். அதிலிருந்து நிவாரணம் பெற சுலபமான தீர்வுகள்...

';

வாய் சுகாதாரம்

வாயில் புண்கள் இருந்தால் ஏற்படும் வலி தாங்க முடியாததாக இருக்கும். வாய் சுகாதாரத்தை சரியாக பேணினால், வாய்ப்புண்கள் ஏற்படாது. ஆனால், ஏற்பட்டுவிட்டால் அதற்கு உடனடி கவனம் கொடுக்க வேண்டும்

';

உப்புத் தண்ணீர்

உணவு உண்ட பிறகு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். அவ்வப்போது உப்பு தண்ணீரால் வாயை கொப்பளித்தால், வாய் சுகாதாரம் பேணி காக்கப்படும்

';

தேங்காயெண்ணெய்

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெயை, வாய்ப்புண் மீது தடவவும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூசிவிட்டு காலையில் வாயை சுத்தம் செய்துவிடவும். இது புண்களை விரைவில் ஆற்ற உதவியாக இருக்கும்

';

பூண்டு

புண்களை விரைவில் குணப்பத்தும் பண்பு கொண்டது பூண்டு. வாயிலுள்ள கொப்புளங்கள் அரைத்த பூண்டை தடவினால், புண்களில் எரிச்சல் உணவு ஏற்படும். ஆனால், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட பூண்டு, புண்களை விரைவாக குணப்படுத்தும்

';

மோர் - தயிர்

உடலுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் மோர் மற்றும் தயிரை அதிகமாக உணவில் பயன்படுத்துங்கள். காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும், இது வாய் அல்சரை விரைவில் போக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story