அதிகப்படியான தண்ணீர் குடிப்பது யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
மட்டன், கடல் உணவுகள், பீர் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். அதற்கு பதில் அதிக காய்கறிகள் சாப்பிடவும்.
உடல் எடையை சீராக வைத்து கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவை குறைக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.
செர்ரிகள் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ் மற்றும் மிட்டாய்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்களை உங்கள் தினசரி உணவில் எடுத்து கொள்வது நல்லது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தயிர் எடுத்து கொள்வது கீல்வாதம் மற்றும் யூரிக் அமிலம் தொடர்பான அபாயத்தைக் குறைக்க உதவும்.
ஆல்கஹால் எடுத்து கொண்டால் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.