உடலில் சுத்திகரிப்பு பேக்ட்ரியாக இருக்கும் கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு, உணவில் உள்ள ஊட்டசத்துக்களை பிரித்து உடலில் சேர்க்கிறது.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாற்றை கலந்து தினமும் காலையில் குடிப்பதால் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் நீங்கும்
புதினா கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் அற்புத உணவு. புதினா சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதில் இருந்து கல்லீரலை டீடாக்ஸ் செய்வது வரை பீட்ரூட் பயனுள்ளதாக இருக்கும்.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் கலவை கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வலுவான ஆக்ஸிஜனேற்றி கல்லீரலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.
மீனில் உள்ள அரோக்கிய கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்குகிறது.
வாதுமை பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்றது.
வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் கல்லீரலை டீடாக்ஸ் செய்ய சிறந்தது.
பருப்பில் உள்ள புரதமும் நார்ச்சத்தும் உள்ள கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.