இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில் நீரிழிவுக்கான முக்கிய காரணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் ஏற்பட சர்க்கரை மற்றும் இனிப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து குறைபாடு, உடலில் கார்போஹைட்ரேட் அளவை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் ஏற்படலாம்.
சிலர் உடல் இளைப்பதற்காக செயற்கை இனிப்பு பயன்படுத்துகின்றனர். சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் நீரழிவு அபாயத்தை பெருமளவு அதிகரிக்கும்.
மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும்.
தூக்கமின்மை பிரச்சனை காரணமாகவும் , கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.