கோடையில் சுகர் லெவலை குறைக்க உதவும் கூல் கூல் பானங்கள்: கண்டிப்பா குடிங்க

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத பானங்களை அவர்கள் உட்கொள்ள வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

மோர்

புரோபயாடிக்ஸ் அதிகமாக உள்ள மோர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. இது உடலையும் குளிர்ச்சியாக வைக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

இளநீர்

ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள இளநீரை சப்ஜா விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலையும் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

விளாம்பழ சாறு

ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ள விளாம்பழ சாறு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

பாகற்காய் சாறு

பாகற்காய் நீரிழிவு நோய்க்கான சிறந்த காயாக பார்க்கப்படுகின்றது. தினமும் இதன் சாறு குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

கற்றாழை சாறு

வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 10, 2024

VIEW ALL

Read Next Story