இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், கண் பார்வை குறைபாடு அல்லது கண் சார்ந்த பிரச்சனை பலருக்கு உள்ளது
கண் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பாதாம் மற்றும் வாதுமை பருப்பு ஆகியவை அவசியம் டயட்டில் இருக்கட்டும்.
நாவல் பழம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம்.
கேரட்டை போலவே சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கெரோட்டின் சத்து நிறைந்துள்ளது.
டார்க் சாக்லேட் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனினும் இதனை அளவோடு சாப்பிட வேண்டும்.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ள புரோக்கலி,, கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.