பழத்தோல்களைக் கொண்டு யூரிக் அமிலத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

';

யூரிக் அமிலம்

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த, உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

';

பழங்கள்

யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பழத்தோல்களும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

';

மாதுளை தோல்

உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமில அளவைக் குறைக்க, மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வது பலனளிக்கும். மாதுளையின் தோல்களில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது யூரிக் அமில அளவைக் குறைக்கும்

';

ஆப்பிள் தோல்

ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான ஆப்பிள், இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆப்பிளை தோலுடன் உட்க்கொள்ளவும்

';

மாங்காய்

மாம்பழத்தின் தோல், அதன் வகைக்கு ஏற்றாற்போல உண்ணலாமா இல்லை வேண்டாமா என்று முடிவு செய்யலாம். பொதுவாக மாம்பழத்தின் தோல் நார்ச்சத்து மிக்கது என்பதோடு, அது யூரிக் அமிலத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தை அனைவரும் உண்டாலும், யாருமே அதன் தோலை உண்பதில்லை. ஆனால், அதன் தோலில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

';

ஆரஞ்சு

உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த ஆரஞ்சு பழத்தோல் நன்மை பயக்கும். வைட்டமின் சி, ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தின் தோல், உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story