முந்திரி பழம்... ஆச்சரியம் தரும் சில ஆரோக்கிய நன்மைகள்

';

முந்திரி பழம்

முந்திரிப்பருப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால், முந்திரி பழத்தை பற்றி பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

';

முந்திரி பருப்பு

முந்திரிப் பருப்பை போலவே முந்திரி பழத்திலும் ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன.

';

முந்திரிபழத்தில் உள்ள சத்துக்கள்

முந்திரி பழத்தில் புரதச்சத்து, பீட்டா கரோட்டின், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

';

வைட்டமின் சி சத்து

முந்திரி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட, ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல்.

';

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை முந்திரி பழத்தில் நிறைந்துள்ளன.

';

மலச்சிக்கல் தீர்க்கும் முந்திரிப்பழம்

முந்திரி பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதோடு, நீர் சத்தும் அதிக அளவில் உள்ளதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது.

';

சரும ஆரோக்கியம்

முந்திரி பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம் ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

நீர் தன்மை கொண்ட பழம்

முந்திரி பழம் நீர் தன்மை கொண்ட பழம் என்பதால், மற்ற பழங்களைப் போல மென்று சாப்பிட முடியாது. ஏனெனில் இதில் சாறு அதிக அளவில் உள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story